search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா இந்தியா கிரிக்கெட் தொடர்"

    தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் ஒரே ஆண்டில் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இன்றைய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியுடன் இணைந்து விராட் கோலி பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். இந்திய அணி இதுவரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடும்போது முதல் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. முதன்முறையாக விராட் கோலி தலைமையில் தற்போது வெற்றி வாகை சூடியுள்ளது.



    ஆசிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காள தேச அணிகள் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளிலும் ஒரே ஆண்டில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.

    தற்போதைய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தென்ஆப்பிரிக்கா (ஜோகன்னஸ்பர்க்), இங்கிலாந்து (ஹெட்டிங்லே), ஆஸ்திரேலியா (அடிலெய்டு) வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று நாடுகளிலும் வெற்றியை ருசித்த ஒரே ஆசிய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அத்துடன் முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
    அடிலெய்டு டெஸ்டில் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. ஹெட் அரைசதத்தால் 2-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, புஜாரா (123) சதத்தால் நேற்றைய முதல்நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 250 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்தியா நேற்றைய 250 ரன்னிலேயே ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹசில்வுட் 3 விக்கெட்டும், ஸ்டார்க், கம்மின்ஸ், நாதன் லயன் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.


    ஹேண்ட்ஸ்காம்ப்

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே ஆரோன் பிஞ்ச் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின் வந்த கவாஜா 28 ரன்னிலும், ஷேன் மார்ஷ் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க வீரர் ஹாரிஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுக்களையும் அஸ்வின் கைப்பற்றினார்.

    5-வது வீரராக களம் இறங்கிய பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 34 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டிம் பெய்ன் 5 ரன்னிலும், பேட் கம்மின்ஸ் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.


    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா

    8-வது விக்கெட்டுக்கு டிராவிஸ் ஹெட் உடன் மிட்செல் ஸ்டார்க் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 2-வது நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 88 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 61 ரன்னுடனும், ஸ்டார்க் 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் சர்மா, பும்ரா, அஸ்வின் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினார்கள்.


    கவாஜாவிற்கு எதிராக அப்பீல் கேட்கும் அஸ்வின், விராட் கோலி

    தற்போது வரை ஆஸ்திரேலியா 59 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. நாளைய 3-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் ஸ்டார்க் துணையுடன் இந்தியாவின் ஸ்கோரை எட்ட முயற்சி செய்வார்.
    அடிலெய்டு ஆடுகளத்தில் புற்களை முற்றிலுமாக வெட்டமாட்டோம் என்று பராமரிப்பாளர் தெரிவித்துள்ளதால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அடிலெய்டு மைதானத்தை பகல்-இரவு (Day-Night) டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தி வந்தது. இதுவரை மூன்று பகல்-இரவு டெஸ்ட் நடந்துள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகளும் முழுவதுமாக ஐந்து நாட்கள் நடந்தது. கிடையாது. டே-நைட் போட்டியில் ‘பிங்க்’ பந்து பயன்படுத்தப்படுகிறது. பிங்க் பந்து ஸ்விங் ஆவதற்கு ஏற்றபடி ஆடுகளம் பராமரிப்பாளர்கள் பிட்ச்-ல் அதிக அளவு புற்கள் வைத்திருந்தார்கள்.

    இந்தியா பகல்-இரவு டெஸ்டிற்கு தயாராகவில்லை என்பதால் இந்த முறை பகல் டெஸ்டாக நடக்கிறது. பகல் டெஸ்டின்போது ‘ரெட்’ பந்து பயன்படுத்தப்படும். பிட்ச்-யில் குறைந்த அளவு புற்கள் இருந்தாலே பந்து அதிக அளவில் ஸ்விங் ஆகும். இந்நிலையில் அடிலெய்டு டெஸ்டின்போது பிட்ச்-யில் புற்கள் அதிக அளவு இருக்கும் என பராமரிப்பாளர் டேமியன் ஹாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அடிலெய்டு பிட்ச் குரேட்டர் ஆன டேமியன் ஹாக் கூறுகையில் ‘‘நாங்கள் பிங்க் பந்து, ரெட் பந்து என வேறுபடுத்தி பார்ப்பதில்லை. இரண்டிற்கும் ஒரே மாதிரியான தயார்படுத்துதல்தான். ஒரேயொரு வித்தியாசம்தான். முன்னதாக பிட்ச் மீதான கவர் நீக்கப்பட்டு, முன்னதாக ஆரம்பிக்கப்படும்.

    உள்ளூர் தொடரான ஷீல்டு லெவனல் போட்டிக்கு நாங்கள் ரெட் பந்து அல்லது பிங்க் பந்து போட்டிக்கு ஒரே மாதிரியான பிட்ச்-தான் தயார் செய்கிறோம். ஆடுகளத்தில் புற்கள் காணப்பட்டாலும் பந்திற்கும், பேட்டிற்கும் இடையில் சிறந்த வகையில் போட்டியாக இருக்கும். தற்போதுதான், புற்கள் ஆடுகளத்தில் எங்கே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.

    வார்னர், ஸ்மித் இல்லாமல் ஆஸ்திரேலியா ரன்கள் குவிக்க திணறி வருகிறது. அதே நிலையில் இந்தியாவின் விராட் கோலி ரன்கள் குவித்து வருகிறார். ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருந்தால், அது யாருக்கு சாதகமாக அமையும் என்பது போட்டி நடைபெறும்போதுதான் தெரியும்.
    ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாத ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த இதை விட்டால் இந்திய அணிக்கே வாய்ப்பே இல்லை என்று பரூப் என்ஜினீயர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 6-ந்தேதி தொடங்குகிறது. முன்னணி பேட்ஸ்மேன்களான வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்லாத இந்தியாவிற்கு தொடரை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வீரரான பரூக் என்ஜினீயர், இந்த வாய்ப்பை இந்தியா தவறவிட்டால், அதன்பின் வாய்ப்பே கிடைக்காது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில் ‘‘ஆஸ்திரேலியா வார்னர் மற்றும் ஸ்மித் என்ற மிகப்பெரிய வீரர்களை இழந்திருக்கிறது. மிகப்பெரிய இரு வீரர்களை ஆடும் லெவனில் இழக்கும்போது, அந்த அணி மிகப்பெரிய அளவில் பலவீனமாகத்தான் இருக்கும்.



    ஆஸ்திரேலியாவை வீழ்த்த இதைவிட மிகச்சிறந்த வாய்ப்பு கிடைக்காது. இரு வீரர்கள் இல்லாத தற்போதைய ஆஸ்திரேலியா ஒரு சராசரியான அணிதான். இந்த வாய்ப்பை நாம் கட்டாயம் பறித்துக் கொள்ள வேண்டும். இந்தியா மிகவும் சிறந்த ஆட்டத்தை விளையாடிகிட்டு இருக்கிறது.

    சிறந்த கேப்டனை பெற்றிருக்கிறோம். சிறப்பாக விளையாடிகிட்டு வருகிறார். சிறந்த ஆல்ரவுண்டர்களை பெற்றிருக்கிறோம். அதேபோல் சிறந்த வேகப்பந்து, சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். இதை சாதகமாக்கி ஆஸ்திரேலியாவை ஆஸ்திரேலியா மண்ணில் வீழ்த்த வேண்டும்’’ என்றார்.
    கட்டாயம் புல் மற்றும் குக் ஷாட் அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ரோகித் சர்மாவை உட்படுத்துவோம் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந்தேதி (நாளைமறுநாள்) தொடங்குகிறது. இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா 2018-ல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரோகித் சர்மா பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் நினைக்கிறார்கள்.

    பொதுவாக ஆஸ்திரேலியா ஆடுகளத்தில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், வேகம் இருக்கும். ரோகித் சர்மா எந்தவொரு ஆடுகளத்திலும் ஷாட்டாக பந்தை வீசினால் புல் ஷாட் அல்லது குக் ஷாட் அடித்துவிடுவார். அப்படிபட்டவருக்கு ஆஸ்திரேலியா ஆடுகளம் சிறப்பாக இருக்கும்.

    இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மாவை வலுக்கட்டாயமாக புல், குக் ஷாட் அடிக்க அவரது ஆசையை தூண்டுவோம் என்று ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நைல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘ரோகித் சர்மா நம்ப வியக்கத்தக்க வீரர். உலகின் எல்லா இடங்களிலும் சிறந்த சாதனையை படைத்துள்ளார். ஆகவே, கவனிக்கப்பட வேண்டிய வீரர்களில் ஒருவர் ரோகித் சர்மா. ஆனால், நாங்கள் புதிய பந்தில் அவருக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளோம்.

    நாங்கள் இந்தியாவிற்கு எதிராக கடைசியாக விளையாடும்போது வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெரென்டோர்ப் ரோகித் சர்மாவை வீழ்த்தியிருக்கிறார். அப்போது பந்தை ரோகித் சர்மாவின் கால் பேடு (Pad) அருகில் பிட்ச் செ்யதார். ஆகவே, நாங்கள் அதேபாணியில் குறிவைத்து மீண்டும் ரோகித் சர்மாவை தாக்குவோம்.

    ஆஸ்திரேலியாவில் பவுண்டரி லைன் மிகப்பெரியது. ஆகவே, வலுக்கட்டாயமாக ரோகித் சர்மாவை புல் ஷாட், குக் ஷாட் அடிக்க  அவரது ஆசையை தூண்டும் வகையில் பந்து வீச முயற்சி செய்வோம். ஜேசன் பெரென்டோர்ப் சிறந்த தொடக்க நிலை பந்து வீச்சாளர் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அவர் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்வார்.

    இன்று சிறப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதே சூழ்நிலை 21-ந்தேதி நிலவும் என்று நம்புகிறோம். அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள முடியும்’’ என்றார்.
    விராட் கோலியால் ஆஸ்திரேலியா தொடரில் ஒரு சதம் கூட அடிக்க முடியாது என கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். #AUSvIND #ViratKohli
    இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் இறுதியில் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் ஸ்மித், வார்னர் ஓராண்டு தடையால் விளையாட முடியாது. அதேவேளையில் விராட் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி சரியான கலவையில் இருப்பதால் இந்த முறை தொடரை வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் மிட்செல் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன் கூட்டணியுடன் பந்து வீசி வரும் வேகப்பந்து வந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், இந்த முறை விராட் கோலியால் ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘என்னுடைய தைரியமான, போல்டான கணிப்பு என்னவென்றால், விராட் கோலியால் இந்த முறை ஒரு சதம் கூட அடிக்க இயலாது என்பதுதான். அவர்களை எதிர்கொண்டு துவம்சம் செய்ய தயாராகி வருகிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.



    விராட் கோலி 2014-15 சீசனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நான்கு சதங்கள் விளாசினார். நான்கு டெஸ்டில் 692 ரன்கள் குவித்தார். சராசரி 86.50 ஆகும். அதேவேளையில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது மூன்று டெஸ்டில் 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.  
    ×